கைதியை தப்பவிட்ட 2 ஏட்டுகள் சஸ்பெண்ட்
கோவில்பட்டி:
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட கைதியை தப்ப விட்டதற்காக அவருக்குக் காவலாக சென்ற 2 ஏட்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
விளாத்திக்குளம் அருகே உள்ள புதூரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் ஈஸ்வரன். பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ஈஸ்வரன் கோவில்பட்டி சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 6ம் தேதியன்று வழக்கு விசாரணைக்காக கோவில்பட்டி ஏட்டுகள் சக்கையா, வேலுச்சாமி ஆகியோர் ஈஸ்வரனை விளாத்திக்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் மாலையில் அவரை சப்-ஜெயிலில் அடைப்பதற்காக அழைத்து சென்றனர்.
கோவில்பட்டி கால்நடை மருத்துவமனை அருகே பஸ்ஸில் வந்தபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைதி ஈஸ்வரன் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டார்.
இதனைத் தொடர்ந்து ஈஸ்வரனை கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் தேடினர். மறுநாள் மாலை புதூரில் பதுங்கியிருந்த ஈஸ்வரனை கைது செய்தனர்.
இதையடுத்து பணியின் போது அலட்சியமாக இருந்து கைதியை தப்பவிட்ட சம்பவத்திற்காக ஏட்டுகள் சக்கையா, வேலுச்சாமி இருவரையும் மாவட்ட எஸ்.பி தீபக் டாமோர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications