இமாம் அலியின் நண்பர் கைது
தூத்துக்குடி:
அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த இமாம் அலியின் நெருங்கிய கூட்டாளியான அகமது அல் அமீன் என்பவர் தூத்துக்குடி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் காட்டு தைக்கா பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அகமது அல் அமீன். இவர் மதுரை திருமங்கலத்தில் போலீசார் மீது தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிய இமாம் அலியின் நெருங்கிய நண்பர்.
இமாம் அலி தப்பிய போது அவருக்கு உடந்தையாக இவர் இருந்துள்ளார். மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மேற்கண்ட வழக்குகளில் போலீஸார் கைது செய்தனர். பின்னர் இவர் நிபந்தை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். வேலூரில் தங்கியிருந்து தினசரி கையெழுத்திட வேண்டும் என அமீனுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி கையெழுத்துப் போட்டு வந்த அமீன் திடீரென தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவரை தூத்துக்குடி போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், ஆறுமுகநேரி போலீசார் காயல்பட்டிணத்தில் பதுங்கியிருந்த அகமது அல் அமீனை கைது செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications