வெடிக்கிறது 3வது அணியில் விரிசல்br/ஜெ. மீது அமர்சிங் பாய்ச்சல்
டெல்லி:
3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியில் குழப்பம் ஏற்படும் வகையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா செயல்படுவதாக சமாஜ்வாடிக் கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங் குற்றம் சாட்டியுள்ளார். அமர்சிங்கின் பேச்சுக்கு அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டாக்டர் மைத்ரேயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக, தெலுங்கு தேசம், சமாஜ்வாடி மற்றும் சில உதிரிக் கட்சிகள் இணைந்து குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பாக 3வது அணியை ஆரம்பித்தன. அக்கூட்டணிக்கு ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி என்றும் பெயர் சூட்டப்பட்டது.
இந்தக் கூட்டணி எத்தனை நாட்கள் நீடிக்குமோ என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல முக்கிய கட்சிகள் கேலி செய்து விமர்சித்தன. அவர்களின் வாய் முகூர்த்தமோ என்னவோ, குடியரசுத் தலைவர் தேர்தல் அன்றே கூட்டணியில் குழப்பம் வெடித்தது.
யாருக்கும் வாக்களிக்காமல் புறக்கணிக்க 3வது அணி முடிவெடுத்திருந்த நிலையில் திடீரென அதிமுக எம்.எல்.ஏக்கள் மட்டும் வரிசையாகப் போய் ஓட்டுப் போட்டு விட்டு வந்தனர். இது 3வது அணித் தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
ஆனால் இந்த குழப்பத்திற்கு ஜெயலலிதா தந்த விளக்கம்தான் படு கேலிக்குரியதாக மாறிப் போனது. எனக்குத் தெரியாமலேயே அவர்கள் முடிவெடுத்து ஓட்டுப் போட்டு விட்டார்கள் என்று ஜெயலலிதா கூறியபோது, கட்சித் தலைமைக்குக் கூட தெரியாமல் ஒரு கட்சியினர் முக்கிய முடிவு எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இனியும் ஜெயலலிதா கட்சித் தலைவர் பதவியில் நீடிக்கலாமா என்று காட்டமாக ஜெயலலிதாவை விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஜெயலலிதா வெளியிட்ட ஒரு அறிக்கையில், அதிமுக 3வது அணியில் இருக்கிறதா, இல்லையா என்பதே சந்தேகமாக உள்ளது. எங்களை எதற்கும் அவர்கள் கூப்பிடுவதில்லை, அது ஏன் என்று புரியவில்லை என்று கூறியிருந்தார்.
ஜெயலலிதாவின் அறிக்கையைத் தொடர்ந்து நேற்று ராஜ்யசபாவில் அதிமுகவுக்கும், 3வது அணிக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்திருப்பதை கண் கூடாகக் காண முடிந்தது. அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக பாஜக கூட்டணி எம்.பிக்கள் தீவிரமாக கோஷமிட்டுக் கொண்டிருந்த நிலையில் அவர்களுடன் அதிமுகவினரும் சேர்ந்து போராடினர். ஆனால் 3வது அணி எம்.பிக்கள் இதில் கலந்து கொள்ளாமல் அமைதியாக இருந்தனர்.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் அறிக்கை 3வது அணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக 3வது அணியின் முக்கியத் தலைவரான அமர்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ஜெயலலிதாவின் அறிக்கை குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதற்கு முன்பும் அவர் இப்படித்தான் நடந்து கொண்டார்.
குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பது என ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி முடிவெடுத்தது. ஆனால் அதை மீறி அதிமுக மட்டும் தேர்தலில் கலந்து கொண்டு ஓட்டுப் போட்டது.
கடந்த 3 நாட்களாக நான் ஜெயலலிதாவுடன் பேச முயற்சித்து வருகிறேன். ஆனால் என்னால் அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவருடைய உதவியாளர் கார்த்திகேயன்தான் என்னுடன் பேசுகிறார்.
ஞாயிற்றுக்கிழமை எனக்கு ஜெயலலிதா போன் செய்துள்ளார். ஆனால் அந்த சமயத்தில் இந்தூரில் இருந்ததால் அவருடன் பேச முடியாமல் போய் விட்டது. மறுபடியும் ஜெயலலிதாவைத் தொடர்பு கொள்ள முயற்சிப்பேன்.
ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் மதிப்புக்குரிய தலைவராக இன்னும் ஜெயலலிதா நீடிக்கிறார். என்னை அவர் அழைத்தால் உடனடியாக நான் சென்னைக்குச் செல்வேன்.
ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி வலுவாக உள்ளது, கட்டுக்கோப்பாக உள்ளது. அதிமுகவும் கூட்டணியில் நீடிக்கிறது. ஜெயலலிதா எங்களின் மதிப்புக்குரிய தலைவராக நீடிக்கிறார். அதில் எந்தேகமும் இல்லை.
பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத், ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. பிரசாத்தான் அதற்குப் பதிலளிக்க முடியும்.
உ.பியில் சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் கட்சியால் பல பிரச்சினைகளை சந்தித்தது. அப்போதெல்லாம் எங்களுக்கு ஆதரவாக இருந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத். எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நாங்கள் விட்டு விட முடியாது என்றார் அமர்சிங்.
அமர்சிங் இப்படிக் கூறியிருக்கையில், அவரது பேச்சு அசிங்கமான அரசியல் விளையாட்டு என அதிமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் டாக்டர் மைத்ரேயன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 3 நாட்ளாக ஜெயலலிதாவுடன் பேச முடியவில்லை என்று அமர்சிங் கூறுவது அசிங்கமான அரசியல் விளையாட்டு.
அதிமுகவுக்கு எதிரான போக்கில் தீவிரமாக இருப்பவை இடதுசாரிக் கட்சிகள். இந்த நிலையில் அவர்களுடன் கை கோர்த்து செயல்படுவதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் அமர்சிங் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.
அணு சக்தி ஒப்பந்தத்தை பெரிய பிரச்சினையைக கருதவில்லை என்று அமர்சிங் கூறுகிறார். 3வது அணிக்கு இது பிரச்சினையே அல்ல என்றும் கூறுகிறார். ஆனால் அதிமுகவைப் பொருத்தவரை இதை பெரிய பிரச்சினயைகத்தான் நாங்கள் பார்க்கிறோம் என்றார்.
அமர்சிங், மைத்ரேயன் பேட்டிகளைப் பார்க்கும்போது 3வது அணி கட்சிகளுக்கும், அதிமுகவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசல் படிப்படியாக அதிகரித்து வருவதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications