வங்கதேச மாணவிக்கு குண்டுவெடிப்பில்br/தொடர்பில்லை - ஹைதராபாத் போலீஸ்
வேலூர்:
வேலூரில் உள்ள கல்லூரியில் படித்து வரும் வங்கதேச மாணவி ஷாஹி ரப்சஞ்சானிக்கு ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிய வந்திருப்பதாக ஹைதராபாத் காவல்துறை உதவி ஆணையர் ரெட்டியண்ணா கூறியுள்ளார்.
ஹைதராபாத் வெடிண்டுச் சம்பவம் தொடர்பாக வேலூர் ஆக்ஸீலியம் கல்லூரியில் படித்து வந்த வங்கதேச மாணவி ரப்சஞ்சானியை ஹைதராபாத் சிறப்புப் புலனாய்வுப் படையினர் கைது செய்தனர். அவரை 5 நாள் காவலில் எடுத்த ஹைதராபாத் போலீஸார் நேற்று வேலூருக்கு அழைத்து வந்தனர்.
மாணவி படித்து வந்த கல்லூரி, அவர் தங்கியிருந்த வீடு ஆகிய இடங்களில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்குப் பின்னர் விசாரணைக் குழுவுக்குத் தலைமையேற்று வந்துள்ள ஹைதராபாத், சார்மினார் உதவி ஆணையர் ரெட்டியண்ணா கூறுகையில், ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இந்த மாணவிக்குத் தொடர்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.
அவர் அப்பாவி. 2008ம் ஆண்டு ஜூன் மாதம் வரை செல்லக்கூடிய விசாவை அவர் வைத்துள்ளார். முறையான ஆவணங்களுடன்தான் அவர் இந்தியாவுக்கு வந்துள்ளார்.
இவரது தந்தை ஜெய்னுலாப்தீனும், சகோதரர் காஜியும், போலியான ஆவணங்களைக் காட்டி ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பான் கார்டு ஆகியவற்றைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கும் கூட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் நேரடியாக தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.
ஆனால் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய ஒரு குற்றவாளிக்கு இவர்கள் புகலிடம் அளித்துள்ளனர். மாணவி ரப்சஞ்சானி மட்டுமே முறைப்படி இந்தியாவுக்கு வந்துள்ளார். மற்ற அனைவருமே சட்டவிரோதமாகத்தான் இங்கு வந்துள்ளனர்.
ரப்சஞ்சானியின் சகோதரர்கள் இர்பான், ஹூசைன் ஆகியோர் ஹைதராபாத் மதரஸாவில் பயின்று வருகின்றனர்.
ஹைதராபாத் வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்திலிருந்து வேறு யாரும் கைது செய்யப்படவில்லை என்றார் ரெட்டியண்ணா.
ரப்சஞ்சானி அப்பாவி என்று ஹைதராபாத் போலீஸாரே தெரிவித்திருப்பதால் அவரை விடுவிக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications