அடுத்த மாதம் வருகிறார் பெனாசிர்
லண்டன்:
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நேற்று பாகிஸ்தான் திரும்பிய சில மணி நேரங்களில் மீண்டும் சவூதிக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் இன்னொரு முன்னாள் பிரதமரான பெனாசிர் பூட்டோ அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்புகிறார்.
முஷாரப்பால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட நவாஸ் ஷெரீப் பின்னர் சவூதிக்கு நாடு கடத்தப்பட்டார். 7 ஆண்டுகள் கழித்து நேற்று அவர் பாகிஸ்தான் திரும்பினார். ஆனால் அவரைக் கைது செய்த பாகிஸ்தான் அரசு கிட்டத்தட்ட நான்கரை மணி நேரத்திற்குப் பிறகு அவரை மீண்டும் சவூதிக்கே நாடு கடத்தி விட்டது.
முதலில் தன்னைக் கைது செய்யுமாறு கூறிய ஷெரீப் பின்னர் சிறையில் அடைத்து விசாரணை என்ற பெயரில் தன்னை பழிவாங்குவதை விட தான் மீண்டும் சவூதிக்கே திரும்ப விரும்புவதாக கூறியுள்ளார். இதையடுத்தே அவர் ஜெட்டாவுக்கு விமானத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டதாக பாகஸ்தான் அரசு கூறியுள்ளது.
நவாஸ் ஷெரீப் நாடு கடத்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஷெரீப் விவகாரத்தில் அரசு நடந்து கொண்ட விதத்தைக் கண்டித்து இன்று பல்வேறு கட்சிகள் பாகிஸ்தானில் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
இந்த நிலையில் முஷாரப் ஆட்சிக்கு வந்த பின்னர் தானாகவே நாட்டை விட்டு வெளியேறி லண்டனுக்குப் போய் விட்ட பெனாசிர் பூட்டோ அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்பத் திட்டமிட்டுள்ளார்.
தான் திரும்பும் தேதியை வருகிற 14ம் தேதி அறிவிக்கவுள்ளதாக பெனாசிர் பூட்டோ தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் பெனாசிர் கட்சியுடன் கூட்டணி அமைக்க முஷாரப் முடிவு செய்தார். இதற்காக பெனாசிருடன் அவர் நேரிலும் பேச்சு நடத்தினார். இதன் அடிப்படையில் அவர்களுக்குள் ஒப்பந்தமும் ஏற்பட்டது.
ஆனால் பெனாசிர் விதித்த சில நிபந்தனைகளை முஷாரப் ஏற்க மறுத்ததால் அந்த ஒப்பந்தம் முடிந்து போய் விட்டதாக பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது கூறியுள்ளார்.
இந்த நிலையில் பெனாசிர் நாடு திரும்புகிறார். அவரும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவாரா அல்லது பாகிஸ்தானிலேயே தங்கியிருக்க அனுமதிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications