அணு ஒப்பந்தத்தால் தொடர்ந்து அமளி;br/நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைப்பு!
டெல்லி:
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததால், கூட்டத் தொடர் முடிவடைவதற்கு
நான்கு நாட்களுக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு விட்டன.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைக்க வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. இதுதொடர்பாக கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவை அமளியில் ஈடுபட்டு வந்தன.
இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்பட முடியாமல் முடங்கிப் போயின. கடந்த நான்கு நாட்களாக ஒரு அலுவலும் நடைபெறாமல் தினசரி ஒத்திவைக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் நேற்றும் இரு அவைகளிலும் அமளி துமளி நிலவியது. நேற்று லோக்சபா முதலில் பிற்பகல் 12 மணி வரையிலும், பின்னர் பிற்பகல் 2 மணி வரையிலும் அதன் பின்னர் 4 மணி வரையிலும், பிறகு 5 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.
அப்படியும் நிலைமை சரியாகாததால், லோக்சபாவை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார். மழைக் காலக் கூட்டத் தொடர் முடிய 4 நாட்கள் இருக்கும் நிலையில் நேற்று முன்கூட்டியே லோக்சபா ஒத்திவைக்கப்பட்டு விட்டது.
இதே நிலைதான் ராஜ்யசபாவிலும் நிலவியது. பலமுறை ஒத்திவைக்கப்பட்ட ராஜ்யசபா இறுதியில் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி அறிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications