லாரியிலிருந்து விழுந்து வாலிபர் சாவு;br/உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!
திருநெல்வேலி:
நெல்லையில் லாரி நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது லாரியிலிருந்து விழுந்த இறந்த வாலிபரின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்து அரசு மருத்துவமனை வாசலில் தர்ணா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் தனியார் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் மணி என்ற மணிகண்டன் கிளினராக பணிபுரிந்து வந்தார். சம்பவதன்று இவர் லாரியில் வெல்டிங் செய்து கொண்டிருந்தபோது மேலிருந்து தவறி விழுந்து இறந்தார்.
மணிகண்டன் குடும்பத்தினருக்கு லாரி நிறுவனத்தினர் ஆறுதல் கூட சொல்ல வரவில்லை என்று தெரிகிறது. மேலும், லாரி நிறுவனத்தின் மெத்தனப் போக்கால்தான் மணிகண்டன் இறந்ததாகவும் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் கோபத்துடன் தெரிவித்தனர்.
இதையடுத்து லாரி நிறுவனத்தினர் வந்து சமரசம் பேசும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று மருத்துவமனை வாளகத்திலேயே அமர்ந்து விட்டனர்.
இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் போலீசார் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மணிகண்டனின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications