விஜயகாந்த் கல்லூரியில் புகுந்துbr/மாணவர்கள் மீது ரவுடிகள் தாக்குதல்
செங்கல்பட்டு:
செங்கல்பட்டை அடுத்த மாமண்டூரில் உள்ள தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு சொந்தமானஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் இன்று ரவுடிக் கும்பல் புகுந்து மாணவர்களை சரமாரியாக தாக்கியது.
செங்கல்பட்டை அடுத்த மாமண்டூரில் நடிகர் விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி உள்ளது. கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்கிடையே வாலிபால் போட்டி நடைபெற்றது.
அப்போது சீனியர் மாணவர்களுக்கும், ஜூனியர் மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. சீனியர் மாணவர்களை முதலாம் ஆண்டு படிக்கும் பிரதீப் என்ற மாணவன் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள் பிரதீப்பை கண்டித்துள்ளனர். ஆனால் பிரதீப் அதைக் காதில் வாங்காமால் தொடர்ந்து திட்டவே சீனியர் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து பிரதீப்பை அடித்துள்ளனர்.
பிரதீப்பின் தந்தை லோக்கல் அரசியல்வாதியாம். இதையடுத்து ரவுடிக் கும்பலுடன் பிரதீப் இன்று கல்லூரிக்கு வந்தார். தன்னைத் தாக்கிய சீனியர் மாணவர்களை அடிக்கத் தேடினார். ஆனால் அவர்கள் இல்லாததால் ஆத்திரத்தில் கல்லூரிக்குள் புகுந்து கண்ணில் அகப்பட்டவர்களையெல்லாம் தாக்கியுள்ளார்.
இந்த தகவல் சீனியர் மாணவர்களுக்கு தெரியவர உடனே அவர்கள் பீர்க்கன்கரணை காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தனர். அரசியல்வாதி சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் மாணவர்களின் புகாரை வாங்க மறுத்த போலீஸார், அவர்களை அங்கிருந்து விரட்டி விட்டனர்.
இதையடுத்து பயந்து போன சீனியர் மாணவர்கள் தாம்பரம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தனர். தாம்பரம் போலீஸார், மாணவர்களை ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
தகவல் தெரிந்ததும் காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக செயலாளர் அனகை முருகேசன் விரைந்து வந்து மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் பாதுகாப்புடன் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications