நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல்br/- 6ம் ஆண்டு நினைவு தினம்
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயாராக் நகரில் இருந்த இரட்டை கோபுரம் மீது அல் கொய்தா தீவிரவாதிகள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
2001ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 11ம் தேதி. நியூயார்க் நகர மக்கள் தங்களது அன்றைய வேலைகளைத் தொடங்கியிருந்த நேரம். திடீரென வந்த இரண்டு விமானங்கள் அடுத்தடுத்து நகரின் முக்கிய அடையாளமான இரட்டை கோபுர உலக வர்த்தக மையத்தின் மீது மோதின.
பொல பொலவென இடிந்து விழுந்த அந்த கோரச் சம்பவத்தில், 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
அல் கொய்தா தீவிரவாதிகள் நடத்திய இந்த பயங்கரத் தாக்குதல் உலகையே உலுக்கியது. தீவிரவாதத்தின் கொடிய கரங்கள் வல்லரசான அமெரிக்காவையே அசைத்துப் போட்டதை உலக நாடுகள் பெருத்த அதிர்ச்சியுடன் கண்டு உறைந்தன.
இந்த சம்பவம் நடந்ததன் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி உலக வர்த்தக மையம் இருந்த இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி மெளன அஞ்சலி செலுத்தினர். செனட் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் நான்சி பலோசி தலைமையில் கூடிய அவர்கள் கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி உயிரிழந்தவர்களுக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
நான்சி பலோசி நிகழ்ச்சியில் பேசுகையில், அமெரிக்கர்கள் கடவுளின் ஆசியைப் பெற்றவர்கள். அவர்களை கடவுள் காப்பார் என்றார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் இன்று நியூயார்க் நகர தாக்குதல் நினைவு தினம் சோகத்துடன் அனுசரிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications