விரைவில் 'கருப்பு எம்.ஜி.ஆர்' ஆட்சி: கு.ப.கி.
பெரம்பலூர்:
விரைவில் தமிழகத்தில் கருப்பு எம்.ஜி.ஆர் ஆட்சி மலரும் என்று தேமுதிக மாநில துணைச் செயலாளர் கு.ப.கிருஷ்ணன் கூறியுள்ளார்.
பெரம்பலுரில் தேமுதிக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கு.ப. கிருஷ்ணண் பேசுகையில், புதுக்கோட்டையில் தேமுதிக வின் 3ம் ஆண்டு விழா நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ள தொண்டர்கள் ஆர்வத்துடன் வாகனங்களில் வருகின்றனர்.
ஆனால் ஆளும் கட்சியினர் வாகன டிரைவர்களை தேமுதிக கூட்டத்திற்கு செல்லக் கூடாது மிரட்டல் விடுக்கின்றனர். திமுக, அதிமுக கட்சிகளுக்குள் நாகரீக சீர்கேடு நடக்கிறது. வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீடு கூட திமுக ஆட்சியில் கட்டித் தர முடியவில்லை என அவர்களது கூட்டணியில் உள்ள கட்சியினரே குற்றம் சாட்டுகின்றனர்.
என்னைப் பொறுத்தவரை பாமகவை நான் ஒரு கட்சியாகவே கருதவில்லை. காரணம் தமிழகத்தில் உள்ள 234 போட்டியிட்டு வெற்றி பெற்றால் தனி செல்வாக்கு உள்ளது என ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் திமுக, அதிமுக ஒட்டுகளைப் பெற்று மாநிலத்தில் உள்ள ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டு செல்வாக்கான கட்சி என்றால் எப்படி ஏர்றுக் கொள்ள முடியும்.
பிற மொழி பலகைகளில் உள்ள இந்தி எழுத்துகளை பாமக அழிப்பதாக கூறுகிறது. அன்புமணி லெட்டர் பேடில் உள்ள இந்தி எழுத்துகளை ஏன் அழிக்க முடியவில்லை. எம்ஜிஆர் உயிரோடு இருந்தவரை திமுக ஆட்சிக்கு வர முடியவில்லை. இனி தமிழகத்தில் விரைவில் கறுப்பு எம்ஜிஆர் ஆட்சி மலரும் என்றார்.












Click it and Unblock the Notifications