ஓவர் டேக் செய்ய முயன்றதில் விபரீதம்br/அரசு பஸ் மரத்தில் மோதி 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கரூர்:
கரூர் அருகே முன்னாள் சென்ற வாகனத்தை ஓவர் டேக் செய்ய முயன்ற அரசுப் பேருந்து, தாறுமாறாக ஓடி மரத்தில் மோதியதில் 4 பேர் பலியானார்கள்.
திருச்சியிலிருந்து இன்று காலை திருப்பூருக்கு ஒரு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. கருர் அருகே மணவாசி என்ற இடத்தில் பேருந்து சென்றபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றது.
அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பஸ் டிரைவர் லட்சுமணன் உடல் நசுங்கி இறந்தார்.
பயணிகள் 3 பேரும் உடல் நசுங்கி இறந்தனர். பஸ்சில் பயணம் செய்த 21 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications