விடிய விடிய வெளுத்த மழை;br/குளிரில் நடுங்கிய குமரி!
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழையின் தொடர்ச்சியாக நேற்று இரவு விடிய விடிய மழை பெய்ததால் மாவட்டமே குளிர்ந்து போய்க் காணப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக வெயிலும், மழையும் மாறி மாறி இருந்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவுக்கு மேல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. மாவட்டத்தின் பல இடங்களில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.
இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவு உயர்ந்து உள்ளது. இன்று காலையிலும் அணை பகுதிகளில் மழை நீடித்தது.
நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களில் விடிய விடிய பெய்த மழை காரணமாக மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications