முஸ்லீம் பகுதியில் விநாயகர் ஊர்வலம்:br/பள்ளபட்டியில் பதட்டம்
கரூர்:
கரூர் மாவட்டம் பள்ளபட்டி பகுதியில், முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியின் வழியாக விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்த இந்து முன்னணி திட்டமிட்டிருப்பதால் அங்கு பெரும் மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.
பள்ளபட்டி இந்திரா நகர் பகுதியில் விநாயகர் ஊர்வலம் புறப்பட்டு பள்ளபட்டி நகரைச் சுற்றி வர போலீஸ் அனுமதியை இந்து முன்னணி பெற்றிருந்தது. இப் பகுதியில் ஊர்வலமாக செல்லும் விநாயகர் சிலைகளை கடைசியாக நல்காஞ்சி ஆற்றில் கரைக்கவும் தீர்மானித்திருந்தனர்.
இதற்கு முஸ்லீம் அமைப்புகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து இந்து முன்னணிக்கு கொடுத்த அனுமதியை காவல்துறை ரத்து செய்து விட்டது. ஆனால் இதை ஏற்க இந்து முன்னணி மறுத்து விட்டது. தடையை மீறி ஊர்வலத்தை திட்டமிட்டபடி நடத்துவோம் என அவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் இப் பகுதியில் கலவர சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் அங்கு தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications