சரத் ஆதரவு திமுக தொழிலதிபரைbr/எதிர்த்து போஸ்டர் - சுரண்டையில் பரபரப்பு
நெல்லை:
சரத்குமாருக்கு ஆதரவாக பேசிய திமுகவைச் சேர்ந்த தொழிலதிபரை எதிர்த்து நெல்லை மாவட்டம் சுரண்டையில் திமுகவினர் போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையை சேர்ந்தவர் தொழில் அதிபர் எஸ்.வி.கணேசன். இவர் திமுகவின் அனுதாபி. தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக உள்ளார்.
சமீபத்தில் நடிகர் சரத்குமார் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது எஸ்.வி.கணேசன் சரத்குமாருக்கு ஆதரவாகவும் திமுகவிற்கு எதிராகவும் மேடையில் பேசியனார்.
மேலும் சரத்குமார் தனிக்கட்சி தொடங்கியதற்கு எஸ்.வி.கணேசன் செய்திதாள்களில் விளம்பரமும் கொடுத்தாராம். இதனால் கோபம் அடைந்த திமுகவினர் அவருக்கு எதிராக சுரண்டை வட்டார பகுதிகள் முழுவதும்
அறங்காவலர் குழு பதவியை ராஜினமா செய்ய வலியுறுத்தி போஸ்டர் போர் நடத்தியுள்ளனர்.
இதனை அறிந்த எஸ்.வி. கணேசன் ஆதரவாளர்கள் அந்த போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தென்காசி தொகுதியில் திமுக வெற்றிக்கு அதிகம் உழைத்தவர் எங்கள் அண்ணாச்சி. மேலும் சுரண்டை பேருந்து நிலையம் அமைய ரூ.1 கோடி மதிப்புள்ள சொந்த நிலத்தை தானமாக கொடுத்துள்ளார். அவருடைய வளர்ச்சியை பிடிக்காத சிலர் இது போல் செய்கின்றனர் என்றனர்.
ஆனால் திமுகவினர் கூறுகையில், எங்கள் தலைவர் ஸ்டாலின் கொடுத்த பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் பதவியை பறிப்போம் என்றனர்.
இந்தப் பஞ்சாயத்து காரணமாக சுரண்டையில் பரபரப்பு நிலவுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications