இன்று ஈரோட்டில் திமுக முப்பெறும் விழா
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோட்டில் இன்று திமுகவின் முப்பெறும் விழா நடைபெறுகிறது. இதில் முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார்.
ஈரோடு பஸ் நிலையம் அருகே வ.உ.சி. பூங்காவில் நடைபெற உள்ள விழாவில் மேல்நிலைப்பள்ளி தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் சான்றிதழும், நிதியும் வழங்கப்படுகிறது.
முரசொலி அறக்கட்டளை சார்பில் விருது வழங்கப்படுகிறது. சிறந்த ஆட்டோ ஒட்டுனர்களுக்கு சான்றிதழும், பண முடிப்பும் வழங்கப்படுகிறது.
அத்துடன் விழாவின் முக்கிய நிகழ்வாக பெரியார், அண்ணா, பாரதிதாசன், கலைஞர் பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றது. முப்பெறும் விழாவையொட்டி ஈரோடு மாநகரம் திமுக கொடி, பேனர், அலங்காரங்களால் திணறி வருகின்றது












Click it and Unblock the Notifications