சுனாமி பீதி விலகியது - மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட மீனவர்களிடையே கடந்த 3 நாட்களாக நிலவி வந்த சுனாமி பீதி விலகியதைத் தொடர்ந்து அவர்கள் கடலில் மன் பிடிக்கச் சென்றனர்.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் சுனாமி ஏற்படலாம் என்ற அச்சத்தால் கடந்த 3 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
தூத்துக்குடி திரேஸ்புரம், இனிகோ நகர், தருவைகுளம், மீன்பிடித் துறைமுகம், புதிய துறைமுகம் கடற்கரை பகுதிகளில் போலீசார் இரவு முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டதன் பேரில் மாவட்டத்தை சேர்ந்த 2500 நாட்டுப்படகுகள், 300 விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 25 ஆயிரம் மீனவ குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று நாட்டு படகு மீனவர்கள் சிலர் குறைந்த தூரத்திற்கு சென்று மீன் பிடித்து வந்தனர். நேற்று பகல் முழுவதும் வானம் மேக முட்டமாகவே காணப்பட்டது. இன்று நிலைமை சீரடைந்ததையொட்டி அனைத்து மீனவர்களும் மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications