கெட்டுப் போன உப்புமா சாப்பிட்டbr/அதிமுகவினருக்கு வாந்தி, பேதி, மயக்கம்!
சேலம்:
அண்ணா பிறந்த நாளையொட்டி சேலத்தில் நடந்த விழாவில் பரிமாறப்பட்ட உப்புமாவை சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட அதிமுகவினருக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் குரால்நத்தம் பஞ்சாயத்தில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இரவில் அனைவருக்கும் உப்புமா பரிமாறப்பட்டது. இதை 30க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்தவர்களுக்கு வாந்தி, தலைசுற்றல், மயக்கம், சிலருக்கு பேதி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உடனடியாக அனைவரும் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் தனியார் மருத்துவமனைக்கு அனைவரும் மாற்றப்பட்டனர்.
குரால்நத்தம் பஞ்சாயத்துத் தலைவர் ராமர் உள்ளிட்ட 10 பேர் அன்னதானப் பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், மற்றவர்கள் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை செல்வகணபதி போய் பார்த்து நலம் விசாரித்தார். பரிமாறப்பட்ட உப்புமாவுக்குப் பயன்படுத்தப்பட்ட ரவை கெட்டுப் போனதாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications