வெள்ளத்தில் சிக்கிய ஐந்து பேரை காப்பாற்றிய சிறுமிக்கு இலவசக் கல்வி
புர்னியா (பீகார்):
வெள்ளத்தில் சிக்கித் தவித்த 5 பேரை காப்பாற்றிய சிறுமிக்கு இலவசக் கல்வி தர பீகார் முதல்வர் நிதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
பீகார் மாநிலம் புர்னியா மாவட்டத்தில் பானர் ஆற்றில் படகு ஒன்று சென்ற பொழுது வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அதில் பயணம் செய்தவர்கள் உதவி கேட்டு குரல் கொடுத்ததும் பர்ஜானா எனும் 15 வயது சிறுமி உடனடியாக ஆற்றில் குதித்து ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகளை ஆற்று வெள்ளத்தில் இருந்து காப்பாற்றினார்.
பர்ஜானா சிறு வயதிலேயே நீச்சலை கற்றுக் கொண்டதாக அவரது தந்தை ஜமீல் அஹமது தெரிவித்தார். வசதியின்மை காரணமாக பள்ளிப் படிப்பை பர்ஜானாவால் தொடர இயலவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பர்ஜானாவிற்கு இலவசக் கல்வி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் தீரச்செயல் புரிந்தமைக்கான தேசிய விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications