தடைகளை கடந்து சேது திட்டம் நிறைவேற்றப்படும்- டி.ஆர்.பாலு உறுதி
சென்னை:
தடைகளைக் கடந்து சேது சமுத்திரத் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், சேது சமுத்திரத் திட்டம் 140 ஆண்டு கால தமிழர்களின் கனவுத் திட்டமாகும். முதல்வர் கருணாநிதி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோரது முன்னிலையில், கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
தற்போது இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 14 ஆகிய தேதிகளில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து ஆதம் பாலம் பகுதியில் மட்டும் அகழ்வுப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மத்திய அரசு விரைவில் உச்சநீதிமன்றத்தை அணுகி ஆதம் பாலம் பகுதியில் பணியை மேற்கொள்ள உரிய உத்தரவினைப் பெறும். திட்டம் திட்டமிட்டபடி விரைவில் நிறைவேற்றி முடிக்கப்படும் என நம்புகிறேன்.
அரசாங்கம் கொள்கை ரீதியாக ஒரு முடிவை எடுத்து நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவில் மிகப் பெரிய அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றும்போது,
தனிப்பட்ட சிலர் பொது நல வழக்கைத் தொடர்ந்து அந்தத் திட்டங்களை தடுத்து நிறுத்த முயற்சிப்பது தேச நலனுக்கு எதிரானது என்பதால் அதை அனுமதிக்க முடியாது என்று நர்மதா பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்புக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான வழக்கில் கடந்த 2000மாவது உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பதை இப்போது குறிப்பிட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் டி.ஆர்.பாலு.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications