டெல்லி சென்ற சதாப்தி ரயிலில் தீ
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்:
சண்டிகரில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பாடி என்ற கிராமம் அருகே சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. இதில் யாரும் காயமடையவில்லை.
தீ பிடித்தவுடன் ரயிலை அவசர சங்கிலியைப் பிடித்து இழுத்து பயணிகள் நிறுத்தினர். இதனால் மற்ற பெட்டிகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது. பின்னர் தீ அணைக்கப்பட்டு சுமார் 20 நிமிடங்களுக்குப் பின் ரயில் புறப்பட்டுச் சென்றது.
மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications