திருப்பதி பிரம்மோத்சவம்: சூர்ய பிரப வாகனத்தில் மலையப்பசாமி ஊர்வலம்
திருமலை:
திருப்பதியில் நடந்து வரும் பிரம்மோத்சவம் விழாவின் 7 நாளான இன்று மலையப்பசாமி ஊர்வலம் நடந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோத்சவம் நடந்து வருகிறது. இன்று 7வது நாள் விழா நடந்தது. இதில் மலையப்பசாமி ஊர்வலம் நடந்தது.
சூர்ய பிரப வாகனத்தில் அமர்ந்திருந்த மலையப்பசாமி மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் ெசல்லப்பட்டார்.
மாலையில் ஊஞ்சல் சேவை நடந்தது. சந்திர பிரப வாகனத்தில் மலையப்ப சாமி ஊர்வலம் நடந்தது.
இதற்கிடையே, பிரம்மோத்சவம் விழாவின் ஒரு பகுதியான கருட சேவை' நிகழ்ச்சியன்று மட்டும் ரூ.ஒரு கோடியே17 லட்சம் உண்டியல் மூலம் வசூலாகியது.
பிரம்மோத்சவத்தின் ஐந்தாவது நாளான நேற்று முன்தினம் கருட சேவை' நிகழ்ச்சி நடந்தது. இதில் ஸ்ரீவாரி உண்டியல் மூலம் ரூ.86 லட்சமும், தரிசன கட்டணம் மூலம் ரூ.18 லட்சமும், சாமி பிரசாதம் மூலம் ரூ.11 லட்சம் கோவிலுக்கு வருவாய் கிடைத்துள்ளது. மொத்தம் 79 ஆயிரத்து 485 பக்தர்கள் கோவிலில் சாமி கும்பிட்டனர்.
பக்தர்களுக்கு உணவு மற்றும் பால் ஆகியவற்றை கோவில் நிர்வாகம் இலவசமாக வழங்கியது.
ஆந்திர பிரதேச அரசு பஸ்கள் மொத்தம் ஆயிரத்து 869 சர்வீஸ்களை இயக்கியது என்று திருப்பதி கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் பிரம்மோற்சவ விழாவையொட்டி கடந்த ஐந்து நாள்களில் கோவிலில் மொத்தம் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மொட்டை போட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கல்யாணகட்டா' துணை நிர்வாக அதிகாரி வெங்கட்டையா கூறுகையில், "கோவிலில் மொட்டை போட வரும் பக்தர்களின் கூட்டத்தை எதிர்பார்த்து கூடுதலாக 40 பெண் நாவிதர்கள் உட்பட 110 நாவிதர்கள் நியமிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் அதிக நேரம் காத்திருப்பதை தவிர்க்க முடிந்தது. ஆண்டுதோறும் 10 லட்சம் பக்தர்கள் மொட்டை போடுவர். ஆனால், பிரம்மோற்சவத்தின் முதல் ஐந்து நாளில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கு மொட்டை போட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications