அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு!
ஈரோடு:
அரசு மருத்துவமனையில் பெண் குழந்தையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் அன்பு காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மன நலம் பாதிக்கப்பட்டவர்களை வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
திண்டல் பகுதியைச் சேர்ந்த மன நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கர்ப்பமான நிலையில் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
எனவே காப்பகத்தினர் அக்குழந்தையை அரசு தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்த்துள்ளனர். பின்னர் அந்த குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அன்பு காப்பகத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறி வந்த மர்ம நபர்கள் சிலர் சிகிச்சை பெற்று வந்த குழந்தையை கடத்திச் சென்றனர்.
பின்னர் காப்பகத்தை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வந்த குழந்தையை பார்க்க வந்த போதுதான் அக்குழந்தையை மர்ம நபர்கள் பொய் சொல்லி கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து ஆர்எம்ஒ பாலசுப்பிரமணி ஈரோடு நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications