மழை வேண்டி தவளைகளுக்கு கல்யாணம்
Subscribe to Oneindia Tamil
வாரணாசி:
வருண பகவானின் அருளை வேண்டி வாரணாசியில், தவளைகளுக்குக் கல்யாணம் செய்து வைத்து நூதன வழிபாடு நடத்தப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் வறட்சி நிலவுகிறது. மழை இல்லாமல் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், பாரம்பரியமாக நடத்தும் தவளைக் கல்யாணத்தை நடத்த கிராமத்தினர் திட்டமிட்டனர்.
இதையடுத்து வாரணாசியில் உள்ள லங்கா என்ற இடத்தில் உள்ள மகேன்தேவி ஹாஸ்டல் என்ற விடுதியில், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஐந்து புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க, தவளைகளுக்கு கல்யாண் நடத்தி வைக்கப்பட்டது. இந்த நூதனக் கல்யாணத்தை நூற்றுக்கணக்கானோர் கூடி கண்டு வருண பகவானை வணங்கினர்.
தவளைகளுக்குக் கல்யாணம் செய்து வைத்தால் மழை வரும் என்பது இந்தியக் கிராமங்களில் உள்ள மக்களின் நம்பிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications