பள்ளி, கல்லூரிகளில் செல்போனுக்கு தடை- அரசுக்கு காவல்துறை பரிந்துரை
சென்னை
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்போன்கள் கொண்டு வருவதை தடை செய்யுமாறு தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
இன்று பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பல மாணவ, மாணவிகள் கேமராவுடன் கூடிய செல்போன்களை வைத்துள்ளனர்.
இந்த செல்போன்களை பயன்படுத்தி மாணவிகளை ஆபாச கோணத்தில் படம் எடுப்பது, அதை மற்ற நண்பர்களுக்கு அனுப்புவது ஆகிய செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து கர்நாடகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் செல்போன் பயன்படுத்த அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது.
இந் நிலையில் சென்னை சிபிசிஐடி திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு டிஐஜி ஆறுமுகம் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
கடந்த சில மாதங்களுக்கு முன் மணலியில் சுரேஷ் (25) என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் இருக்கும் சுரேஷ், தனது காமிரா செல்போன் மூலம் இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து பலருக்கு அனுப்பி உள்ளார். ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் இந்தப் படங்களை இவர் அனுப்பியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஆபாச படங்கள் அனுப்புபவர்கள் மற்றும் தயாரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இப்போதுள்ள சட்டங்களின் கீழ் இவர்களை கைது செய்தால் அவர்கள் எளிதில் வெளியே வந்து மீண்டும் அதே குற்றத்தை திரும்பவும் செய்கிறார்கள். எனவே சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
பள்ளி, கல்லூரிகளில் படிக்க செல்வோருக்கு எதற்கு செல்போன் என்று தெரியவில்லை. செல்போன் கொண்டு செல்பவர்கள் நல்ல மாணவ-மாணவிகளையும் தவறான வழியில் கொண்டு செல்கிறார்கள்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் காமிரா செல்போன் கொண்டு வர தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு காமிரா செல்போன் வாங்கி கொடுத்து ஊக்கப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் இந்த மாதம் மட்டும் ரூ. 1.2 கோடி மதிப்புள்ள திருட்டு விசிடிக்கள், டிவிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார் டிஐஜி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications