லியாகத் அலியிடம் சிக்கிய நடிகை!!!
சென்னை:
குவியல் குவியலாக பெண்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ள 'நவீன மன்மதன்' லியாகத் அலிகானின் முதல் மனைவி சப்ரியா சபனா, தனக்கும், தனது கணவருக்கும் இனி ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது என அறிவித்துள்ளார்.
![]() | ![]() |
![]() | ![]() |
இன்டர்நெட் மையத்தை நடத்தி, திருமண இணையதளத்தில் பல்வேறு பெயர்களில் கலர் கலரான விளம்பரம் கொடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய லியாகத் அலிகான் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார்.
உடலாலும், பணத்தாலும் அவரால் ஏமாற்றப்பட்ட பெண்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே வருகிறது. மிகப் பெரும் காமக் கொடூரனாகவும், பண வெறி பிடித்த நபராகவும், படோடபமாக வாழ்ந்துள்ள லியாகத் அலிகான் தனது வாழ்க்கையிலேயே முதல் முறையாக புழல் சிறையில் பெண் வாசம் இல்லாமல் கைதிகளுக்கு மத்தியில் அடைபட்டுள்ளார்.
இந்த நிலையில் லியாகத் அலிகானின் முதல் மனைவியான சப்ரியா சபனா, தனது கணவர் குறித்து பெரும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் கிராமத்தில் தனது தாயார் வீட்டில் குழந்தையுடன் தங்கியுள்ளார் சப்ரியா.
லியாகத் அலிகான் குறித்துக் கேட்டாலே கதறி அழ ஆரம்பித்து விடுகிறார் சப்ரியா. அலி குறித்து அவர் அழுது கொண்டே கூறுகையில், அவருக்கு நெய்வேலி அருகே உள்ள மந்தாரக்குப்பம்தான் சொந்த ஊர். உறவினர் மூலமாகத்தான் அவரை எனக்குப் பெண் பார்த்து கல்யாணம் செய்து வைத்தார்கள்.
கம்ப்யூட்டர் என்ஜீனியராக சேலத்தில் வேலை பார்ப்பதாக கூறித்தான் கல்யாணம் செய்தார்கள். 2002ம் ஆண்டு கல்யாணம் நடந்தது. அப்போது எனக்கு வயது 20.
கல்யாணத்திற்குப் பிறகு சில நாட்கள் சந்தோஷமாகத்தான் இருந்தோம். அதன் பின்னர் குடித்து விட்டு வீட்டுக்கு வர ஆரம்பித்தார். என்னை அடித்து உதைப்பார். எனக்கென்று யாரும் இல்லாததால் அவரைத் தட்டிக் கேட்க முடியாமல் போய் விட்டது.
முதலில் நான் கர்ப்பமடைந்தபோது பத்து மாதங்களில் குழந்தை இறந்து விட்டது. என்னுடன் 2003ம் ஆண்டு வரைதான் அவர் என்னுடன் வசித்தார். பிறகு பிரிந்து போய் விட்டார்.
பிறகு எனது மாமா வந்து சமரசம் செய்து வைத்தார். பிறகு என்னை திருச்சிக்குக் கொண்டு வந்து குடி வைத்தார். அப்போதுதான் அவர் ஆபாசப் படம் எடுத்து சிக்கிக் கொண்டார். அப்போதே நான் விவாகரத்து செய்ய நினைத்தேன். ஆனால் கைதாகி விடுதலையாகி வந்த பின்னர் திருந்தி விட்டதாக தெரிவித்தார். இதை நான் நம்பினேன்.
இதனால் சேர்ந்து வாழ்ந்தேன். இந்த சமயத்தில் சீமா என்ற பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டார். இதையடுத்து எனது தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். அந்த சமயத்தில் நான் மறுபடியும் கர்ப்பம் தரித்திருந்தேன். மகள் பிறந்தாள்.
ஒருமுறை மட்டும் மகளைப் பார்த்து விட்டுப் போனார். அதன் பிறகு வரவே இல்லை. இந்த நிலையில்தான் இப்படி ஒரு அதிர்ச்சிச் செய்தி வந்துள்ளது. என்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இவ்வளவு மோசமான நபராக இருக்கிறாரே என்று அதிர்ச்சியுடன் உள்ளேன்.
அவரை விட்டு நிரந்தரமாக பிரிய முடிவு செய்து விட்டேன். இனிமேல் எனக்கும், அவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்றார் சப்ரியா.
நடிகைகளையும் வீழ்த்திய அலி:
இதற்கிடையே, சில நடிகைகளையும் லியாகத் அலிகான் தனது வலையில் வீழ்த்திய வாழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
படித்த பெண், படிக்காத பெண், வசதியான பெண், வசதியில்லாத பெண் என சகல விதமான பெண்களையும் மோசடி செய்துள்ளார் லியாகத் அலிகான். அந்த வரிசையில் நடிகைகளும் கூட உள்ளனர் என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலியின் வலையில் சிக்கியவர்களில் ஸ்மிதா என்பவரும் ஒருவர். இவருக்கு வயது 38. அதாவது அலியை விட நான்கு வயது மூத்தவர். இவர் 'மைடியர் லிசா' என்ற பேய்ப் படத்தில் நிழல்கள் ரவியின் மனைவியாக நடித்துள்ளார். பிறகு தமிழில் அவருக்கு வேலை இல்லாமல் போய் விட்டது.
அதன் பின்னர் அவர் மலையாளத்துக்குத் தாவினார். அங்கு பலான படங்கள் பலவற்றில் உடல் திறமையைக் காட்டியுள்ளார்.
திருமண மோசடியில் சகட்டு மேனிக்குப் போய்க் கொண்டிருந்த அலி, திடீரென சினிமா எடுக்கலாமா என்ற யோசனைக்கு வந்தார். மலையாளத்தில் படம் எடுக்க தீர்மானித்த அவர் ஸ்மிதாவை நாயகியாகப் போட்டார்.
படப்பிடிப்பு பிளஸ் டிஸ்கஷன் என்று கூறி கொடைக்கானலுக்குக் கூட்டிப் போய் அங்கு ஹோட்டலில் ஸ்மிதாவைத் தங்க வைத்தார். இதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர் அலியின் எடுபிடியாக இருந்த டிரைவர் சேகர்தான்.
அங்கு வைத்து இருவரும் ஸ்மிதாவுடன் காமக் களியாட்டத்தில் ஈடுபட்டனர். இதை மறக்காமல் வீடியோவில் படம் பிடித்துக் கொண்டார் சேகர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஓடும் வகையில் பக்காவானா படமாக அதை உருவாக்கினார் அலி.
சூட்டோடு சூடாக அதை சிடிக்களில் மாற்றி செமத்தியான ரேட்டில் விற்று விட்டார் அலி. இது ஒரு படம் போல நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.
இதுதவிர தமிழ் சினிமாவைச் சேர்ந்த சில நடிகைகளையும் தனது வலையில் வீழ்த்தி பலான படஙகளை அலி எடுத்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
நர்ஸை மிரட்டிய சப்ரியா:
இந்த நிலையில் தனது கணவரின் பலான வேலைகள் குறித்து முதல் மனைவியான சப்ரியாவுக்கு ஓரளவு தெரியுமாம். இருந்தாலும் என்ன செய்வது என்று தெரியாமல் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக கணவரால் ஏமாற்றப்பட்ட பெண்கள் சிலரையும் அவர் காட்டிக் கொடுத்து விடக் கூடாது என்று மிரட்டவும் செய்ததாக தெரிகிறது.
அப்படி மிரட்டப்பட்டவர்களில் ஒருவர் நல்லம்மை. இவருக்கு வயது 19. ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் நர்ஸாக உள்ளார். இவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். அப்படி வந்து சிக்கியவர்தான் அலி.
தான் லண்டனில் பெரிய தொழிலதிபர், அங்கு பெரிய மருத்துவமனையைக் கட்டி, அதை நல்லம்மை பெயரில் எழுதி வைத்து விடுவதாக பெரிய பூந்தோட்டத்தையே நல்லம்மையின் பெற்றோர் காதில் சுற்றியுள்ளார்.
இப்படிச் சொல்லி ரூ. 50 ஆயிரம் பணத்தையும் விசா வாங்க என்று கூறி கறந்துள்ளார். மேலும், ஈரோட்டில் உள்ள ஒரு தியேட்டருக்குக் கூட்டிக் கொண்டு போய் சிவாஜி படமும் பார்த்துள்ளார்.
தனது காரியம் முடிந்தவுடன் நல்லம்மையுடன் இருந்த தொடர்பை துண்டித்துக் கொண்டார். இதனால் அதிர்ந்த நல்லம்மை குடும்பத்தினர், கஷ்டப்பட்டு முதல் மனைவி சப்ரியாவின் முகவரியைக் கண்டுபிடித்தனர். உடனே அங்கு சென்றனர்.
நல்லம்மையிடம் சப்ரியா, நானே ஏமாந்து போய்த்தான் இவரைக் கல்யாணம் செய்து கொண்டேன். அவர் குறித்து போலீஸில் புகார் கொடுத்தும் பலன் இல்லை. வக்கீல்களை தன் பக்கம் வைத்துள்ளார். அவரை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. உன்னாலும் முடியாது.
உன்னை எந்தக் கோலத்தில் படம் பிடித்து வைத்திருக்கிறாரோ, தெரியாது. எனவே இதை விட்டு விடு. இப்படித்தான் ஒரு மும்பைப் பெண் என்னிடம் வந்தார். அதுகுறித்து நான் அவரிடம் பேசினேன். அதற்கு அவர், அந்தப் பெண்ணை என்னுடன் பேசச் சொல் என்றார்.
நானும் அவரை பேசுமாறு கூறினேன். அவரிடம் பேசி விட்டு என்னை சந்தித்த அப்பெண், என்னை நிர்வாணமாக படம் பிடித்திருப்பதாக கூறி கதறி அழுதார்.
எனவே இதை இப்படியே விட்டு விடுங்கள். நான் பணத்தை வாங்கித் தந்து விடுகிறேன் என்று கூறி நல்லம்மையை அனுப்பி விட்டாராம் சப்ரியா.
தனது கணவரைக் காப்பாற்றவே சப்ரியா விவாகரத்து, ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது என நாடகம் ஆடுவதாக ஏமாந்தவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
சென்னையில் மட்டும் 13:
இதற்கிடையே, லியாகத் அலிகான் சென்னையில் மட்டும் 13 பெண்களைக் கல்யாணம் செய்து கொண்டுள்ளாராம். அந்தப் பெண்கள் குறித்த விவரங்களை போலீஸார் தோண்டி எடுத்துள்ளனர். அவர்களிடம் தற்போது ரகசியமாக விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது. அவர்களின் வாக்குமூலங்களைப் போலீஸார் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதை வைத்து லியாகத் அலிகான் மீது சரமாரியாக வழக்குப் போடவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இந்தப் 13 பேரில் சிலர் டைடல் பூங்காவில் கம்ப்யூட்டர் என்ஜீனியர்களாகப் பணியாற்றுகிறார்களாம். அவர்களை போலீஸார் அணுகியபோது கதறி அழுதபடி தங்களது கதையைக் கூறியுள்ளனர்.
ஓடும் காரில் உல்லாசம்:
போலீஸ் விசாரணையின்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அவர்களின் தலையைச் சுற்ற வைக்கிறதாம்.
தஞ்சையைச் சேர்ந்த ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர் பெண்ணை காரில் அழைத்துச் சென்றுள்ளார் அலி. அப்போது சேகர் காரை ஓட்ட பின் சீட்டில், பட்டப் பகலில், ஓடும் காரிலேயே அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்தாராம் அலி.
சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணே போலீஸாரைத் தொடர்பு கொண்டு இந்த அக்கிரத்தைக் கூறி அழுது புலம்பியுள்ளாராம். அவரிடமும் வலுவான வாக்குமூலத்தைப் போலீஸார் பெற்றுள்ளனராம்.
இதேபோல நாகையைச் சேர்ந்த எம்.எஸ்சி படித்த ஒரு விதவைப் பெண்ணையும் தனது வலையில் வீழ்த்தியுள்ளார். அவரது வீட்டுக்கு வழக்கம் போல படாடபாக காரில் போய் இறங்கிய அவர், அவரது பெற்றோரிடம் இன்று முதல் இவர்தான் எனது மனைவி என்று கூறி சென்டிமென்ட்டாக அவர்களை அட்டாக் செய்துள்ளார்.
அதை நம்பிய அந்த அப்பாவிக் குடும்பத்தினர் இரவில் வீட்டில் தங்க வைத்துள்ளனர். தங்கிய அவர் சும்மா தங்காமல் அந்தப் பெண்ணிடம் கல்யாணத்திற்கு முன்பே முதலிரவைக் கொண்டாடி விட்டுத்தான் கிளம்பிச் சென்றாராம். அத்தோடு விடாமல் ரூ. 1 லட்சம் பணத்தையும் ஏமாற்றி வாங்கிச் சென்றுள்ளாராம்.
சதை வெறியாலும், பண வெறியாலும் கும்மாளம் போட்டு வந்த லியாகத் அலி தற்போது புழல் சிறையில் படு கேஷுவலாக இருக்கிறார், சந்தோஷமாக இருக்கிறாராம். அவரது முகத்தில் கொஞ்சம் கூட கவலையோ, சங்கடமோ இல்லையாம்.
இதில் கொடுமை என்னவென்றால் அவரிடம் பல கைதிகள், எப்படியெல்லாம் ஜாலியாக இருந்தீர்கள், என்ன மாதிரியான வித்தையைக் காட்டி பெண்களை வீழ்த்தினீர்கள் என்று கதை கதையாக கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?
















Click it and Unblock the Notifications