போபாலில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் தொடங்கியது
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இக்கூட்டத்தில், உடல் நலம் காரணமாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கலந்து கொள்ளவில்லை.
மிகப் பரபரப்பான அரசியல் சூழ்நிலையின் பின்னணியில், பாஜகவின் 3 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று காலை போபால் நகரில் தொடங்கியது.
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் தொடங்கிய இக்கூட்டத்தில் அத்வானி, யஷ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். உடல் நலம் காரணமாக முன்னால் பிரதமர் வாஜ்பாய் மட்டும் பங்கேற்கவில்லை.
இந்த மாநாட்டில் அணு சக்தி ஒப்பந்தம், ராமர் பாலம், குஜராத் சட்டசபைத் தேர்தல் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
அணு சக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிகள் கடுமையாக எதிர்ப்பதால் விரைவில் லோக்சபாவுக்கு தேர்தல் வரும் என பாஜக உறுதியாக நம்புகிறது. அப்படி தேர்தல் வந்தால் அதில், என்ன மாதிரியான அணுகுமுறைகளை கையாளுவது என்பது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
கடந்த 1996ம் ஆண்டு போபாலில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் வகுக்கப்பட்ட வியூகங்களின் அடிப்படையில் தான், அப்போது நடந்த லோக்சபா தேர்தலை பாஜக சந்தித்து ஆட்சியை பிடித்தது என்பது நினைவிருக்கலாம்.
அதே போன்று தற்போதும் போபாலில் நடக்கும் தேசிய செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து, ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை பாஜகவினரிடம் நிலவுகிறது.
மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் அனைத்தும் முன்னுக்குப்பின் முரணான கொள்கைகள் கொண்டவை என்பதை மக்களிடம் விளக்குவதற்கும், பல்வேறு துறைகளில் மத்திய அரசு சந்தித்த தோல்விகளை முன்வைத்து பிரசாரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் தீவிரவாத செயல்கள், சாதாரண மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாமல் போனது ஆகிய பிரச்சனைகள் இதில் முக்கியத்துவம் பெறும்.
பணவீக்கம், அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல் விலை உயர்வு, விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க முடியாதது போன்றவை பெரியளவில் பிரசாரத்தில் முன்வைக்கப்படும்.
உள்நாட்டு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட விலையை விட இரு மடங்கு அதிக விலை கொடுத்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தை பெரிதுபடுத்தி விவசாயிகளை தன் பக்கம் இழுக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்றம், அக்ஷர் தாம் கோவில், ரகுநாத் மந்திர் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் மும்பை, மாலேகான், ஐதராபாத் குண்டுவெடிப்பு சம்பவங்கள் போன்றவை காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் நடந்தன என்பதை பிரசார பிரச்சினையாக்க பாஜக தீர்மானித்துள்ளது.
இவை எல்லாவற்றையும் விட ராமர் பாலப் பிரச்சினையைத்தான் பாஜக முக்கிய ஆயுதமாக கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக முக்கியத் தீர்மானம் கொண்டு வரப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ராமர் பாலம் பிரச்னையில் நேரடியாக ஈடுபடாமல், சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து துவக்கப்பட்டுள்ள ராமர் பால பாதுகாப்பு இயக்கத்துக்கு முழு ஆதரவு அளித்து, நாடு முழுவதும் இதை பரப்ப முடிவு எடுக்கப்பட உள்ளது.
சச்சார் கமிட்டி அறிக்கை மூலம் முஸ்லிம் மக்களை தங்கள் பக்கம் ஈர்க்க காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்பட்டு வரும் நேரத்தில் ராமர் பாலம் விவகாரத்தில் பெரும்பான்மையினரான இந்துக்களின் மத நம்பிக்கையை மதிக்காததையும் இணைத்து பிரசார வியூகம் வகுக்கப்பட உள்ளது.
காங்கிரஸ் கூட்டணியின் தோல்விகளை முன்வைத்து வியூகங்களை வகுத்து வரும் பாஜக தங்களது கட்சியில் ஏற்பட்டுள்ள உட்பூசல்களை தீர்ப்பது குறித்தும் முதலில் விவாதிக்க உள்ளது.
'அத்வானி பிரதமராக வேண்டும்'
இதற்கிடையே பாஜக சார்பில் அடுத்த பிரதமராக அத்வானிதான் தேர்வு செய்யப்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ராம் நாயக் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அத்வானிக்கு முழு தகுதிகளும் உள்ளன. எனவே அவர்தான் அடுத்த பிரதமராக வேண்டும் என்றார்.
அதேபோல இன்னொரு மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங்கும், அத்வானிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த ஐம்பது ஆண்டுகளாக வாஜ்பாயுடன் இணைந்து செயல்படுகிறார் அத்வானி. எனவே வாஜ்பாய்க்கு அடுத்து பிரதமர் பதவியை வகிக்கும் தகுதி அத்வானிக்குத்தான் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
வெங்கையா நாயுடுவும் அத்வானியை ஆதரித்துள்ளார். ஆனால் இன்னொரு முன்னாள் தலைவரான பங்காரு லட்சுமணன், வாஜ்பாயை ஆதரித்துள்ளார்.
ஆனால் இதுகுறித்தெல்லாம் இந்த மாநாட்டில் பேசப்பட மாட்டாது, ராமர் பாலப் பிரச்சினை மற்றும் நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து மட்டுமே விவாதிக்கப்படும் என கட்சியின் செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி தெளிவுபடுத்தியுள்ளார்.
மாநாட்டையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஐந்து ஐ.பி.எஸ். அதிகாரிகள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநாட்டில் கல்து கொள்வதற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்துள்ள 233 பிரதிநிதிகள் தங்கியுள்ள ஹோட்டல்களில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications