முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் 100 பவுன் நகை திருடிய ஹெல்மட் திருடி பிடிபட்டார்
சென்னை:
ஹெல்மட் அணிந்து கொண்டு, முன்னாள் பாமக எம்.எல்.ஏ உலகரட்சகன் வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவியை அடித்து உதைத்து, மயக்கப்படுத்தி விட்டு 100 பவுன் நகைகளுடன் தப்பிச் சென்ற பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
முன்னாள் பாமக எம்.எல்.ஏ உலகரட்சகன் தனது மனைவி, மகனோடு கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் வசித்து வரும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டுக்கு 2 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் வந்தார். அப்போது உலகரட்சகனின் மனைவி அம்பிகா மட்டுமே வீட்டில் இருந்தார்.
ஹெல்மட் அணிந்தபடி வந்த அந்தப் பெண் குடிக்கத் தண்ணீர் கேட்டார். தண்ணீர் கொடுத்த அம்பிகாவிடம், மீண்டும் தண்ணீர் கேட்டார். இதையடுத்து அந்தப் பெண்ணை வீட்டுக்குள் அழைத்து அமரச் செய்தார் அம்பிகா.
அப்போது அம்பிகாவை சரமாரியாக அடித்த அந்தப் பெண், கழுத்தையும் நெரித்தார். இதில் அம்பிகா மயக்கமடைந்தார். பின்னர் அந்தப் பெண் வீட்டில் இருந்த 100 பவுன் நகைகள், ரூ. 1 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினார்.
இந்தத் துணிரகத் திருட்டு தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சந்தேகத்தின் பேரில் அதே பகுதியில் வசிக்கும் துணை நடிகை காஞ்சனா என்பவரையும் விசாரித்தனர். இவர் உலகரட்சகன் மூலம் வீடு வாங்கியுள்ளார்.
ஆனால் அவரிடம் விசாரணை நடத்தியதில் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், மந்தைவெளியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் போலீஸ் பிடியில் சிக்கினார். அவருடைய கணவர், உலகரட்சகனிடம் முன்பு டிரைவராக வேலை பார்த்தவர். தற்போது வேலையில் இல்லை.

கணவனும், மனைவியும்தான் அன்றைய தினம் உலகரட்சகன் வீட்டுக்கு வந்துள்ளனர். லட்சுமி மட்டும் ஹெல்மட் அணிந்தபின் வீட்டுக்குச் சென்று அம்பிகாவைத் தாக்கி நகை, பணத்துடன் வெளியே வந்துள்ளார். பின்னர் தனது கணவர் பைக்கில் ஏறிப் பறந்து விட்டார்.
லட்சுமி மற்றும் அவரது கணவரைக் கைது செய்த போலீஸார் கொள்ளையடிப்பதற்காகப் பயன்படுத்தி ஹெல்மட்டையும் பறிமுதல் செய்துள்ளனர்.
போலீஸ் கமிஷ்னர் பாராட்டு:
இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை உடனடியாக பிடித்த போலீசாரின் திறமையை சென்னை மாநகர கமிஷ்னர் நாஞ்சில் குமரன் பாராட்டியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications