பெண்களை கிண்டல் செய்தவர்களை தட்டிக் கேட்ட வாலிபர் கொலை
விருதுநகர்:
பெண்களை கிண்டல் செய்தவர்களை தட்டிக் கேட்ட வாலிபர் கொலை செய்யப்பட்டார். மற்றொருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த பந்தல் குடியைச் சேர்ந்தவர்கள் மரியராஜ், வேதமுத்து, ராஜா ஆகியோர் பெண்களை கேலி செய்து வந்துள்ளனர்.
இவர்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் போகவே அதே ஊரைச் சேர்ந்த கோபால்ராஜூம் அவரது நண்பர் முத்துப்பாண்டியும் சேர்ந்து கண்டித்துள்ளனர்.
இதனால் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் கோல்பால்ராஜ் மற்றும் முத்துப்பாண்டியை மரியராஜ், வேதமுத்து, ராஜா ஆகியோர் அரிவாள், கத்தி போன்ற படுபயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.
இதில் கோல்பால்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த முத்துப்பாண்டி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அருப்புக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மரியராஜ், வேதமுத்து, ராஜா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications