மதானி விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு
சென்னை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பாஜக தலைவர் அத்வானியின் வருகையையொட்டி கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சுமார் 55 பேர் பலியாயினர்.

இதுதொடர்பாக அல்-உம்மா இயக்கத் தலைவர் பாஷா, செயலாளர் அன்சாரி, கேரளா மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல்நாசர் மதானி உள்பட 166 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் இப்போது தான் தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மதானி மீது எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவரை கோவை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது.
இந்த விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கோரி வந்தன.
இந் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உள்துறை செயலாளர் மாலதி, மதானி விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யுமா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மாலதி, இந்த வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைத்தவுடன் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து மேல் முறையீடு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
தலைமைச் செயலாளர் திரிபாதி கூறுகையில், இந்த வழக்கில் தீர்ப்பை பகுதி பகுதியாக வழங்கி வருகிறது நீதிமன்றம். இதனால் தீர்ப்பின் நகல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications