அக். 1ம் தேதி பந்த் - திமுக கூட்டணி முடிவு வேதாந்தியைக் கைது செய்ய கோரிக்கை
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்தை தடுத்து நிறுத்த முயலும் பாஜகவைக் கண்டித்தும், விரைவில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கோரியும், அக்டோபர் 1ம் தேதி தமிழகத்தில் பந்த் நடத்த திமுக கூட்டணி தீர்மானித்துள்ளது. வேதாந்தி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அது மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று மாலை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் அரங்கில் நடந்தது. சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் சில முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவை வருமாறு:
- முதல்வர் கருணாநிதியின் தலையைக் கொய்து வருவோருக்குப் பரிசு என்று கூறிய மத வெறிப் பேச்சால், முதல்வரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் நாட்டு மக்கள் உள்ளனர். அத்தகைய அக்கிரமமான, மத வெறியைத் தூண்டும் வகையில் பேசியவர் மீது கிரிமினல் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
- சேது சமுத்திரத் திட்டத்தால் ஏற்படும் பொருளாதார பலன்களைத் தடுத்து நிறுத்த முயலும் பாஜக, வி.எச்.பி. போன்ற மதவாத சக்திகளின் உள்நோக்கத்தை மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையிலும், இந்தத் திட்டத்தை திட்டமிட்டபடி , எந்தவித தடையும் இன்றி நிறைவேற்றக் கோரியும் அக்டோபர் 1ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும். அதற்கு முதல் நாள் செப்டம்பர் 30ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், திமுக சார்பில் அன்பழகன், கனிமொழி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பொருளாளர் சுதர்சனம், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, தி.க. தலைவர் கி.வீரமணி, சிபிஎம் செயலாளர் வரதராஜன், சிபிஐ செயலாளர் தா.பாண்டியன், போட்டி மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொதுச் செயலாளர் ஹக்கீம் சையத் சத்தார், புரட்சி பாரத தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications