நக்சல் சுந்தரமூர்த்தியின் 4 கூட்டாளிகள் கைது
மதுரை:
மதுரை மாவட்டத்தில் நக்சலைட் தலைவர் சுந்தரமூர்த்தி உள்லிட்டோருக்கு தங்க புகலிடம் கொடுத்த, சுந்தரமூர்த்தியின் நான்கு கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம், முருகமலை வனப் பகுதியில் ஆயுதப் பயிற்சி பெற்ற 4 நக்சலைட்டுகளையும், திருப்பூரில் பதுங்கியிருந்த நக்சல் தலைவர் சுந்தரமூர்த்தியையும் அடுத்தடுத்து போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் கியூ பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், கடந்த 1992ம் ஆண்டு மதுரை வந்த நக்சல் தலைவர் சுந்தரமூர்த்திக்கு, மதுரை மாவட்டத்தில் உள்ள நக்சல் ஆதரவாளர்கள் அடைக்கலம் கொடுத்தது தெரியவந்தது.
இவர்களை பிடிக்க தர்மபுரியில் இருந்து டிஎஸ்பி லோகநாதன் தலைமையில் போலீசார் மதுரை வந்தனர். டிஎஸ்பி லோகநாதனுடன், மதுரை நகர கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் போலீசார், சுந்தரமூர்த்திக்கு அடைக்கலம் கொடுத்த ஆரப்பாளையத்தை சேர்ந்த காய்கறி வியபாரி பெருமாள் (36), மலப்பட்டியைச் சேர்ந்த மன்மத ராஜா(56), திருப்பதி (55) மற்றும் போடியில் வசிக்கும் ரத்னவேல் (46) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களில் பெருமாள், திருப்பதி, மன்மதராஜா ஆகியோர் உழவர் விடுதலை முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கைது செய்யப்பட்ட 4 பேரையும் சென்னை தடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications