வீட்டுப் பட்டாசுக்கு 'வேட்டு'!
Subscribe to Oneindia Tamil
சிவகாசி:
வீடுகளில் தயாராகும் பட்டாசுகளை பட்டாசுத் தயாரிக்கும் நிறுவனங்கள் வாங்கி விற்றால், அந்த நிறுவனங்களுக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என சிவகாசி சிவகாசி வருவாய் கோட்டாச்சியர் கனேசன் எச்சரித்துள்ளார்.
தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதையொட்டி பட்டாசுத் தயாரிப்பு சூடு பிடித்துள்ளது. சமீப காலமாக அரசு உரிமம் இன்றி வீடுகளில் பட்டாசுகளை தயாரித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அப்படி வீடுகளில் தயாராகும் பட்டாசுகளை வாங்கினால் ஆலை உரிமம் ரத்து செய்யப்படும் என பட்டாசு நகரான சிவகாசி ஆர்.டி.ஓ. கணேசன் எச்சரித்துள்ளார்.
உரிமம் பெற்று பட்டாசு ஆலை நடத்த முடியாத நிலையில் உள்ள பலர் மூலப் பொருட்களை வாங்கி, வீடுகளில் தயாரித்து அதை வாங்கி வெளியில் விற்பனை செய்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கணேசன் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications