பெரியார் திக தகவல் பலகை மீது தார் பூச்சு: தூத்துக்குடியில் பரபரப்பு, போலீஸ் குவிப்பு
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உள்ள பெரியார் தி.கவினரின் தகவல் பலகை மீது தாரை ஊற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் படத்துன் கூடிய தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.
அதில், ''தமிழக முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து தீவிரவாதி வேதாந்தி எம்.பி.யை கைது செய்ய வேண்டும். அவர் செருப்படி வாங்கும் காலம் நெருங்கி விட்டது- இவண் கருப்பு சட்டை'' என்று எழுதப்பட்டிருந்தது.
இந் நிலையில் யாரோ சிலர் அத்தகவல் பலகையில் உள்ள பெரியார் படத்தின் மீது தாரை ஊற்றியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரியார் தி.க.மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத்தலைவர் பால்ராஜ், துணைச் செயலாளர் மதன் உள்ளிட்டோர் இன்று காலை அங்கு திரண்டு வந்தனர்.
தகவல் பலகை மீது தார் ஊற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications