'வெளிநாட்டு வேலை' மோசடி மன்னன் கைது
சென்னை:
வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக பலரையும் ஏமாற்றி சிறை சென்றவர் மீண்டும் அதே மோசடியைச் செய்து கைதாகியுள்ளார்.
சென்னை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்தவர் சிவசண்முகம்.
இவர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்புவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்து 2003ம் ஆண்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்.
ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் அதே மோசடியை ஆரம்பித்தார்.
அவரது விளம்பரங்களைப் பார்த்தவர்கள் பலரும் சரியாக விசாரிக்காமல் லட்சக்கணக்கில் பணம் கட்டினர்.
இதில் சிட்லபாக்கத்தை சேர்ந்த ஹேமந்த் குமார் என்பவரும் ஒருவர். இவருக்கு தென் ஆப்பிரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.46,000த்தை வாங்கினார் சண்முகம்.
அவருக்கு விசாவும் வாங்கித் தந்தார். ஆனால், அது போலியானது என்று தெரியவந்தது.
இவரைத் தவிர மேலும் 7 பேரிடமும் ரூ.1.5 லட்சம் வரை சுருட்டியுள்ளார்.
பணமும் தராமல் விசாவும் வாங்கித் தராமல் ஏமாற்றிய இவரை இந்த 8 பேரும் சேர்ந்து அவர் தங்கியிருந்த பெரியமேடு பகுதி விடுதியில் சென்று முற்றுகையிட்டனர்.
ஆனால், அவர்களை சண்முகம் மிரட்டியதோடு தகாத வார்த்தைகளாலும் திட்டினார். இதையடுத்து அவரை 8 பேரும் சேர்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கியதில் ரத்தக் காயம் அடைந்தார்.
இதையடுத்து அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications