கோவில் உண்டியல்களில் எச்சரிக்கை 'அலார்ம்'
சென்னை:
கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணம், நகைகளைத் திருடுவதைத் தடுக்க உண்டியல்களில் அபாய எச்சரிக்கை மணியை பொருத்து தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கோவில்களில் களவு மற்றும் கொலை போன்ற நிகழ்வுகளைத் தடுக்க இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் உள்துறை அமைச்சர் மாலதி,
அறநிலையத்துறைச் செயலாளர் ராஜேந்திரன், சிறப்பு ஆணையர் பிச்சாண்டி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி விஜயக்குமார், பொருளாதாரப் பிரிவு கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம், காவல்துறை ஐஜி ஷா மற்றும் அதிகாரிகள் கொண்ட ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
சிலைகள் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள் உள்ள கோவில்களில் நவீன தொழில்நுட்பம் கொண்ட திருடர் எச்சரிக்கை மணி பொருத்தப்பட வேண்டும். உண்டியல்களுக்கு திருடர் எச்சரிக்கை மணிக்கான சென்சார் பொருத்தப்பட வேண்டும்.
இரவு நேர காவல் பணிக்கு திடகாத்திரமான இளைஞர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
கோவில்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்கள் மூலம் இரவு நேரங்களில் ரோந்துப் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையும், அறநிலையத்துறையும் அவ்வப்போது கோவில் பாதுகாப்பு தொடர்பான பணிகளை உயர் அலுவலர்கள் நிலையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications