கருணாநிதிக்கு கருப்புக் கொடி - தலித் அமைப்பு அறிவிப்பு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டைக்கு வரும் முதல்வர் கருணாநிதிக்கு கறுப்பு கொடி காட்டப் போவதாக புரட்சி தமிழகம் என்ற தலித் கட்சித் தலைவர் புரட்சி கவிதாசன் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் கருணாநிதி அரசு நல திட்ட உதவிகள் வழங்க புதுக்கோட்டைக்கு வரும் 28 ம் தேதி வருகிறார். அப்போது அவருக்கு கருப்புக் கொடி காட்டப் போவதாக புரட்சி கவிதாசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த ஒரு வருடமாக தேவேந்திர குல மக்களின் முக்கிய கோரிக்கைகளை எடுத்து கூற காத்திருந்தோம்.
இதை வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் கோபாலபுரத்தில் முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தோம். முதல்வரை சந்திக்க அனுமதி அளிப்பதாக கூறி போராட்டத்தைக் கைவிடச் செய்தனர். ஆனால் பின்னர் எங்களைக் கைது செய்து விட்டனர்.
இம்முறை நாங்ள் ஏமாறப் போவதில்லை. புதுக்கோட்டைக்கு வரும் கருணாநிதிக்கு கறுப்பு கொடி காட்டப்படும்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆதிதிராவிடர் அரசாணையை உடனே ரத்து செய்யவேண்டும். தஞ்சை ராஜராஜன் சோழன் சிலையை கோவில் உள்ளே வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை நடத்தவுள்ளோம் என்றார் அவர்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications