திமுக அரசைக் கலைக்கக் கோருவதா? பாஜகவுக்கு கருணாநிதி கண்டனம்!
திருச்சி:
பாஜக அலுவலகம் மீதான தாக்குதல் தொடர்பாக திமுக அரசைக் கலைக்கக் கோரும் பாஜகவின் கோரிக்கை கண்டனத்துக்குரியது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
திருச்சியில் இன்று காலை செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், சென்னை பாஜக தலைமை அலுவலகம் மீதான தாக்குதல் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பாஜக கோருவது கண்டனத்துக்குரியது.
ராமர் பாலம் தொடர்பான சர்ச்சை முடிந்து விட்டது. இனிமேல் அதுகுறித்துப் பேச விரும்பவில்லை.
தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி நடத்தவுள்ள பந்த்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுக்கவில்லை. சென்னையில் நடந்த அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு. அந்தக் கூட்டத்தில், ஆளுங்கட்சியாக உள்ள திமுகவும் பங்கேற்றது. பந்த் அமைதியான முறையில் நடைபெறும்.
தொழில் வளர்ச்சியைப் பொறுத்தவரை தமிழகத்தின் எந்தப் பகுதியையும் அரசு புறக்கணிக்கவில்லை.
மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் நிறுவனங்களை நிறுவ தேவையான இடங்களை அரசு ஒதுக்கியுள்ளது.
நான்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் இதுவரை ரூ. 12 ஆயிரம் கோடி அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன என்றார் அவர்.
பின்னர் புதுக்கோட்டை சென்ற முதல்வர் கருணாநிதி அங்கு 5வது கட்டமாக நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலங்கள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications