புதுவையிலும் முழு அடைப்பு: திமுக அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி:
தமிழகத்தைப் போலவே, புதுச்சேரி மாநிலத்திலும் அக்டோபர் 1ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என திமுக கூட்டணி அறிவித்துள்ளது.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி பந்த் நடத்த திமுக கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரியில் திமுக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் இன்று நடந்தது. அக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புதுவை மாநில திமுக அமைப்பாளர் ஆர்.வி.ஜானகிராமன் கூறுகையில், தமிழகத்தைப் போலவே புதுவையிலும், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்தி முழு அடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications