டெல்லியில் சுனிதா வில்லியம்ஸ் - பிரதமரை சந்திக்கிறார்
டெல்லி:
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இன்று டெல்லி வந்தார். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
விண்வெளியில் 195 நாட்கள் தங்கி புதிய சாதனை படைத்துள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், தற்போது இந்தியா வந்துள்ளார்.
சொந்த மாநிலமான குஜராத்துக்கு வந்த அவரை டெல்லிக்கு வருமாறு பிரதமர் மன்மோகன் சிங் அழைத்திருந்தார். இந்த நிலையில் சுனிதா இன்று காலை டெல்லி வந்தார். அங்கு அவருக்கு பெரும் திரளானோர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அமெரிக்க தூதரக அதிகாரிகளும் சுனிதாவை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
ஹைதராபாத்திலிருந்து டெல்லி வந்த சுனிதா வில்லியம்ஸ், பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 4ம் தேதி வரை அவர் டெல்லியில் தங்குகிறார்.
திங்கள்கிழமை பள்ளி மாணவ, மாணவியரை சந்தித்து உரையாடுகிறார் சுனிதா. தனது விண்வெளி அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications