பந்த்துக்கு தடை வருமா? அதிமுக மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
டெல்லி:
திமுக கூட்டணி நாளை நடத்தவுள்ள பந்த்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி திமுக கூட்டணி சார்பில் நாளை பந்த் நடத்தப்படவுள்ளது. இதை எதிர்த்து அதிமுக, ஜனதாக் கட்சி மற்றும் டிராபிக் ராமசாமி என்கிற சமூக நல ஆர்வலர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திமுக கூட்டணியினர் நடத்துவது பந்த்தான். இருப்பினும் இதற்குத் தடை விதிக்க முடியாது. அதேசமயம், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இடைக்காலத் தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து அதிமுக சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை அவசர மனுவாக கருதி உடனடியாக விசாரித்து தீர்ப்பளிக்குமாறு உச்சநீதிமன்ற நீதிபதி பி.என்.அகர்வாலிடம் அதிமுக சார்பில் கோரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து நீதிபதி அகர்வால் தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை இன்று சிறப்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
இந்த மனுவில், உச்சநீதிமன்றத தீர்ப்புக்கு முரணாக இந்த பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் சேது சமுத்திர வழக்கு நிலுவையில் உள்ளபோது பந்த் நடத்துவது தேவையற்றது.
இதனால் பெரும் வன்முறை மூளும். பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே இந்த பந்த்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications