அதிமுக அலுவலகத்திற்கு 'பூட்டு மேல் பூட்டு'!
கரூர்:
கரூரில் அதிமுக அலுவலகத்திற்கு இரட்டை பூட்டு போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர், தாந்தோணி நகர அதிமுக அலுவலகம் திண்டுக்கல் செல்லும் சாலையில் மில் கேட் பகுதியில் கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகின்றது.
இந்த அலுவலகத்திற்கு வழக்கம் போல் நேற்று நிர்வாகிகள் சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். காரணம் வழக்கமாக போடப்படும் பூட்டுக்கு மேல் ஒரு பூட்டை யாரோ மர்ம ஆசாமிகள் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தகவல் தாந்தோணி நகர அதிமுக செயலாளர் பெரியசாமிக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவர் உடனே அலுவலகத்திற்கு வந்து பார்த்து நடந்தது என்ன என விசாரித்தார்.
உடனே அவர் இத்தகவலை கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செந்தில் பாலாஜியிடம் தெரிவித்தார்.
இது குறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில் கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செந்தில் பாலாஜி மீது உள்ள கோபத்தில் யாரோ சிலர் இப்படி ஒரு பாதக செயலை செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
ஆனால் இப்பிரச்சனை குறித்து காவல் நிலையத்தில் புகார் ஏதும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications