பாஜக அமைச்சர்கள் ராஜினாமா: காங் ஆதரவுடன் ஆட்சியில் தொடர குமாரசாமி திட்டம்!
பெங்களூர்:
கர்நாடகத்தில் பெரும் அரசியல் திருப்பமாக பாஜகவைச் சேர்ந்த 17 அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்து முதல்வர் குமாரசாமியை சந்தித்து கடிதத்தைக் கொடுத்தனர். அடுத்து ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறவும் பாஜக தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
பாஜகவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி முதல்வர் குமாரசாமி, தனது முதல்வர் பதவியை நேற்று மாலைக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக கெடு விதித்திருந்தது. ஆனால் குமாரசாமி இதற்கு மறுப்பு தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று மாலை பாஜகவைச் சேர்ந்த 17 அமைச்சர்களும் குமாரசாமியை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களைக் கொடுத்தனர்.
அவர்களிடம், 5ம் தேதி வரை பொறுத்திருக்குமாறு குமாரசாமி கோரியுள்ளார். ஆனால் அதை பாஜக அமைச்சர்கள் நிராகரித்து விட்டனர். இதையடுத்து கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்று கூறி குமாரசாமி, அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.
பாஜக அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து விட்டதால் கர்நாடகத்தில் பெரும் அரசியல் பரபரப்பு எழுந்துள்ளது. அடுத்தபடியாக ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற பாஜக தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இன்று அல்லது நாளைக்குள் ஆளுநரை சந்தித்து ஆதரவு வாபஸ் கடிதத்தை பாஜக வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவின் இந்த அதிரடியால் குழம்பிப் போன மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவெ கெளடாவும், முதல்வர் குமாரசாமியும், காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெறும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
பாஜக தனது ஆதரவை வாபஸ் பெறுவதற்கு முன்பு காங்கிரஸின் ஆதரவைப் பெற்று விட கெளடா திட்டமிட்டுள்ளார். ஆனால், பாஜகவுடனான தொடர்புகளை முழுமையாக துண்டித்துக் கொண்டால்தான் ஆதரவு குறித்துப் பரிசீலிக்க முடியும் என காங்கிரஸ் கட்சி கூறி வருவதாக தெரிகிறது.
கர்நாடகத்தில் நிலவும் பரபரப்பான சூழ்நிலையால் அஙகு இடைத் தேர்தல் வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications