குமரியில் கோவா ஆளுநர் மனைவிக்கு உடல் நலக்குறைவு!
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் கோவா ஆளுநர் மனைவிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரிக்கு நேற்று கோவா கவர்னர் எஸ்.சி. ஜமீர் தனது மனைவியுடன் வருகை தந்தார். அவர் தனது மனைவியுடன் கன்னியாகுமரியில் உள்ள கேரளா அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது மனைவி அல்மேலாவுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. இதனால் அவர் மயக்க நிலைக்கு ஆளானார். இது குறித்து உடனே கன்னியாகுமரி அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் கேரளா அரசு விருந்தினர் மாளிகைக்கு விரைந்து வந்து கோவா ஆளுநரின் மனைவிக்கு முதல் உதவி சிகிச்சையும், முக்கியமான சிகிச்சைகளையும் செய்தனர்.
பின்பு ஆளுநர் மனைவியை மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல தனியார் சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து டாக்டர்கள் தீவீர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications