பஞ்சாயத்து பணியாளர்களுக்கு செல்போன்!
விக்கிரமசிங்கபுரம் (நெல்லை):
நெல்லை மாவட்டம் சிவந்திபுரம் பஞ்சாயத்து குடிநீர் பணியாளர்களுக்கு சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் இலவச செல்போன்களை வழங்கினார்.
சிவந்திபுரம் பஞ்சாயத்தில் வேலை பார்க்கும் குடிநீர் பணியாளர்களுக்கு இலவச செல்போன் வழங்கும் விழா மற்றும் முழு சுகாதார இயக்கம் மூலம் வீடுகளில் நவீன கழிப்பிடம் அமைக்க 24 பேருக்கு தலா ஆயரத்து 200 ரூபாய் மானியம் வழங்கும் விழா சிவந்திபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்தது.
விழாவில் சபாநாயகர் ஆவுடையப்பன் கலந்து ெகாண்டு பேசுகையில்,
சிவந்திபுரம் பஞ்சாயத்தில் நீண்ட நாட்களாக குடிநீர் பற்றாக்குறை இருந்தது. அதை போக்க கடந்த ஒரு ஆண்டில் புதிய தண்ணீர் தொட்டி மற்றும் குடிநீரேற்ற தொட்டி கட்டி குடிநீர் தட்டுபாட்டை போக்கி இருக்கிறேன்.
ஒரு சில பகுதிகளில் குடிநீர் வழங்குவது தாமதமாகி உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் கிடைப்பதில்லை.
மேலும் இந்த பஞ்சாயத்துக்கு பாபநாசத்தில் இருந்தும், ஆலடியுரில் இருந்தும் குழாய்களில் குடிநீர் கொண்டு வரும் வழியில் உடைப்புகள் ஏற்பட்டு பொது மக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே இந்த குறைகளை நீக்குவதற்காக குடிநீர் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு செல்போன் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இனி தாமதம் இல்லாமல் குடிநீர் வழங்கப்பட வேண்டும்.
பணியாளர்களாகிய நீங்கள் குடிநீர் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் அந்தப் பிரச்சனை உங்களை பாதிக்காது. ஆனால் இங்குள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளை பாதிக்கும். ஏன், என்னை கூட பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு துரிதமாக பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications