அண்ணன் தாக்கப்பட்டதை தடுத்த தம்பி கொலை
அம்பாசமுத்திரம்:
அண்ணனை தாக்கியதை தடுத்த தம்பியை கொலை செய்த கும்பலுக்கு போலீஸார் வலை வீசியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் கடையம் முதலியார்பட்டியை சேர்ந்தவர் ஆதம்சேட். இவரது மகள் மீராவுக்கு, ஆதம்சேட்டின் மனைவி மைதீன் பாத்துவின் தம்பி ஜமால் என்பவர் சென்னையில் மாப்பிள்ளை பார்த்தாராம்.
இது ஆதம் சேட்டுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அவருக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்களிடையே பகை இருந்து வந்துள்ளது.
இதனால் வேதனையடைந்த மைதீன்பாத்து, தனது மகள் மீராவை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து ஆதம்சேட் மாமியார் வீட்டிற்கு போய் சத்தம் போட்டு விட்டு கருத்தையாபுரத்திலுள்ள தன் தம்பி முகமது நாகூர் வீட்டுக்கு சென்று விட்டார்.
மருமகன் வந்த தகவலை ஜமாலின் தாய் லோகையா, ஜமாலிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த ஜமால் ஒரு ஆட்டோவில் சில ஆட்களுடன் கருத்தையாபுரம் சென்று அங்கு முகமது நாகூர் வீட்டில் இருந்த மைத்துனன் ஆதம் சேட்டிடம் தகராறு செய்துள்ளார்.
தகராறு முற்றி கலப்பாக மாறியது. அண்ணனைத் தாக்க வந்தவர்களை முகம்மது நாகூர் தடுத்துள்ளார். அப்போது அவரை அக்கும்பல் சரமாரியாக தாக்கி விட்டுத் தப்பியது.
உயிருக்கு போராடிய 2 பேரையும் அம்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முகமது நாகூர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications