ஐ.டி. நிறுவனங்களின் பெருக்கம் எதிரொலி; சென்னையில் குவியும் 5 ஸ்டார் ஹோட்டல்கள்!
சென்னை:
சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருகி வருவதால், 5 நட்சத்திர ஹோட்டல்கள் குவியத் தொடங்கியுள்ளன.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 7க்கும் மேற்பட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் சென்னையில் வரவுள்ளன. தற்போது உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் வாடகையும் கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளதாம்.
பிற பெருநகரங்கள் கூட தேவைகளைப் பூர்த்தி செய்யத் திணறி வரும் நிலையில் சென்னையில் நிலைமை தலைகீழாக உள்ளதாம். 2011ம் ஆண்டு வாக்கில் சென்னையில் பெரிய அளவிலான ஹோட்டல்கள் வந்து விடும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து எம்பீ குழுமத்தைச் சேர்ந்த நிஷா புருஷோத்தமன் கூறுகையில், சென்னை ஒரு தூங்கும் யானை. இங்கு அனைத்து விதமான அடிப்படைக் கட்டமைப்பும் சிறப்பாக உள்ளன. முதலீட்டுக்கு ஏற்ற சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை மாநகரம் வேகமாக விரிவடைந்து வருகிறது என்றார்.
பிரபலமான லீலா குழுமம் 380 அறைகள் கொண்ட பிரமாண்ட ஹோட்டலைக் கட்டி வருகிறது. 90 மில்லியன் டாலர் முதலீட்டில் இது உருவாகி வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த ஹோட்டல் திறக்கப்படவுள்ளது.
எம்பீ குழுமத்தின் சார்பில் திறக்கப்படவுள்ள ஹில்டன் இன்டர்நேஷனல் தவிர வெல்கம்குருப்பின் கிராண்ட சோழா, ஜேடிபள்யு மாரியாட், தாஜ் ஜிவிகே ஆகிய பிரபல ஹோட்டல்களும் சென்னைக்கு வந்து கொண்டுள்ளன.
பிற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல்களின் வாடகை குறைவாகவே உள்ளது. ஒரு நாளைக்கு ரூ. 8000 முதல் ரூ. 10,000 வரை வாடைகை உள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications