செல்போனில் பேசியபடி மாடியிலிருந்து கீழே விழுந்தவரால் முதியவர் பரிதாப சாவு
சென்னை:
செல்போனில் பேசியபடி 4வது மாடியிலிருந்து கீழே விழுந்தவரால், 70 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மொபைல் போன் என்பதால் பலரும் அதை நடந்தபடியும், வாகனங்களில் சென்றபடியும்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதனால் பல ஆபத்துக்கள் இருப்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை.
மாடியில் நின்று செல்போனில் பேசியபோது தவறி கீழே விழுந்து இறந்தவர்கள், கை கால்களை உடைத்துக் கொண்டவர்கள் குறித்த செய்திகள் அதிக அளவில் வந்துகொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் சென்னையில் மாடியிலிருந்து செல்போன் பேசியபடி கீழே விழுந்தவர், 70 வயது முறுக்கு வியாபாரியின் மேலே விழுந்து அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
சென்னை மின்ட் தெருவைச் சேர்ந்தவர் கிரண் ராஜ். இரும்புக் கடை வைத்துள்ள இவரது மகன் பெயர் ரவி. இவர் தனது தந்தையின் தொழிலுக்கு உதவியாக உள்ளார்.
இவர் தனது கடையின் 4வது மாடியில் உள்ள மொட்டை மாடியில் நின்றபடி செல்போனில் பேசியுள்ளார். அப்போது நடந்தபடியே பேசிக் கொண்டிருந்தார்.
இதில் நிலை தடுமாறி மேலிருந்து கீழே விழுந்தார். கீழே விழுந்த அவர் அங்கு தள்ளுவண்டியில் முறுக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த 70 வயது முதியவர் மீது விழுந்தார். இதில் அந்த முதியவர் படுகாயமடைந்தார். ரவியின் காலும் உடைந்தது.
இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முறுக்கு வியாபாரி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து யானை கவுனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications