புலிகளின் ஆயுதக் கப்பல் மூழ்கடிப்பு - 15 பேர் பலி
கொழும்பு:
நடுக்கடலில் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பலை இலங்கை கடற்படை தாக்கி அழித்தது. அதிலிருந்த 15 பேரும் உயிரிழந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் தசநாயகே கூறுகையில், தோண்ட்ரா பகுதியிலிருந்து 1700 கடல் மைல் தொலைவில் நடுக் கடலில், மட்சுஷிமா என்ற பெயருடைய விடுதலைப் புலிகளின் ஆயுதம் தாங்கிய கப்பல் வருவதை கடற்படையினர் பார்த்தனர்.
இதையடுத்து அந்தக் கப்பலை தாக்கி அழித்தனர். அதில் இருந்த 15 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டு விட்டனர்.
2003ம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தம் 10 விடுதலைப் புலிகளின் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கப்பலில் இருந்த ஆயுதங்கள் வன்னிப் பகுதிக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக வந்து கொண்டிருந்தன.
70 அடி நீளம் கொண்ட இந்தக் கப்பலில் அதிக வேக படகுகள், தண்ணீரில் செல்லும் ஜெட் படகுகள், ரேடார் கருவிகள் உள்ளிட்டவை இருந்தன. மேலும் சில புலனாய்வு கண்காணிப்பு கருவிகளும் அதில் இருந்தன என்றார் அவர்.
கடந்த செப்டம்பர் 11ம் தேதி புலிகளின் ஆயுதக் கப்பலை மூழ்கடித்த இலங்கை கடற்படை கப்பலில் இருந்த 45 புலிகளையும் கொன்றது. அதன் பின்னர் இலங்கை கடற்படையால் தாக்கி அழிக்கப்பட்ட மிகப் பெரிய கப்பல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications