ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டிய பஞ். துணைத் தலைவர் கைது
திருநெல்வேலி:
துப்புரவு தொழிலாளியை சாதிப் பெயரைச் சொல்லித் திட்டிய பஞ்சாயத்துத் துணைத் தலைவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் கல்லிடைகுறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பான்குளத்தை சேர்ந்தவர் பரமபாஸ்கர். பஞ்சாயத்து துணை தலைவரான இவர் நேற்று 5 பேரை அழைத்து கொண்டு மயிலாடும்பாறை காலணியில் ரோடு போடுவதற்காக அங்குள்ள முட்செடிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த துப்புரவு தொழிலாளியான இசக்கி என்பவர், எனது இடத்திலுள்ள முட் செடிகளை ஏன் வெட்டுகிறீர்கள் என கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த பரமபாஸ்கர் இசக்கியின் ஜாதியை சொல்லி குறிப்பிட்டு அவதூறான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் இசக்கி புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீண்டைமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பரம பாஸ்கரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications