லண்டன் இந்தியர்களின் ஹோட்டல்களில் திடீர் ரெய்டு - 10 பேர் கைது
லண்டன்:
லண்டனில் உள்ள இந்தியர்களுக்குச் சொந்தமான ஹோட்டல்களில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி, அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்த 10 பேரை கைது செய்தனர்.
லண்டனில் உள்ள இந்தியர்களின் ஹோட்டல்களில் பல இந்தியத் தொழிலாளர்கள் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து லண்டனில் உள்ள இந்தியர்களுக்குச் சொந்தமான ஹோட்டல்களில் போலீஸார் அதிரடி சோதனையில் இறங்கினர்.
இந்த சோதனையில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை கைவிலங்கிட்டு போலீஸார் அழைத்துச் சென்றாக ஹோட்டலுக்கு சாப்பிட வந்த வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். அவர்கள் மீது 1971ம் ஆண்டு இங்கிலாந்து குடியுரிமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முறையான விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் இந்தியத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்தது தொடர்பாக 3 இந்திய ஹோட்டல்கள் மற்றும் 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications